1. Home
  2. தமிழ்நாடு

பெட்ரோல் பங்க் ஊழியரை முகம் சுளிக்க வைத்த பெண்...! செருப்பை கையில் எடுத்து மிரட்டிய பெண்..!

1

லக்னோவில் உள்ள ஒரு  பெட்ரோல் பங்கில் பெண் ஒருவர் ஆண்களை செருப்பால் அடித்து, தகாத வார்த்தைகளால் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் பங்கில் வரிசையில் முதலில் நின்றதால் தனக்கு முதலில் பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்று அந்தப் பெண் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதில் அந்தப் பெண் ஆபாசமாகப் பேசி, ஆண்களைத் தாக்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சம்பவம் நடந்தபோது, அந்தப் பெண் மற்றவர்களை விட தான் முதலில் வந்ததாகக் கூறினார். அதனால் தனக்கு முதலில் பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்று பணியாளர்களிடம் வாதாடினார். வரிசையில் முதலில் வந்ததாகச் சொன்னதற்கு ஒருவர் கேள்வி கேட்டதால் வாக்குவாதம் அதிகமானது.

வீடியோவில் அந்தப் பெண் ஒருவரின் பைக்கை தள்ளிவிட்டு, மற்றவர்களிடம் கத்தியது பதிவாகியுள்ளது. தன்னை எதிர்த்தவர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். மேலும், தனக்கு முதலில் சேவை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரு கட்டத்தில், செருப்பை எடுத்து அவர்களை அடிக்கவும் மிரட்டினார்.

அந்தப் பெண் பேசிய ஆபாசமான வார்த்தைகள் இணையத்தில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. "மய்யான் ச-டுங்கி டூ மினிட் மெய்ன்" என்று அவர் பேசியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்கள் இந்த சண்டையில் தலையிடவில்லை.

சம்பவத்தை வீடியோ எடுத்த ஒருவரை அந்தப் பெண் தாக்க முயன்றார். அவரிடம் இருந்து போனை பறிக்க முயற்சி செய்து, அவரை ஆபாசமாக திட்டினார்.

இந்த வீடியோவை X தளத்தில் ஒருவர் பகிர்ந்துள்ளார். இன்னொரு X பயனர் கருத்து தெரிவிக்கையில், "பெட்ரோல் நிரப்ப வரிசையில் முதலில் இருந்ததால், பெண் செருப்பை எடுத்து மக்களை அடிக்கிறார். அவர் பயன்படுத்திய வார்த்தைகளை ஒரு ஆண் பயன்படுத்தியிருந்தால், பெண்ணின் மானத்தை கெடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருப்பார்" என்று கூறியுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like