டெல்லி பேருந்தில் பிகினியுடன் பயணித்த பெண்..!
சமீப காலமாக பொது இடங்களில் மக்களுக்கு தொல்லை ஏற்படும் வண்ணம் செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறை தரப்பில் எவ்வளவோ எச்சரிக்கை விடுத்தும் பொதுஇடங்களில் ஆபாசமாகவும், அத்துமீறல்களிலும், எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் பிகினி உடை அணிந்து வந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் பேருந்தில் ஏறியதும், எதிரே அமர்ந்திருந்த நபரிடம் ஏதோ செய்கை செய்கிறார். ஆனால், அந்த நபர் தப்பித்தால் போதும் என அங்கிருந்து செல்கிறார்.இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண் ஒருவர் பிகினி உடையில் பொது இடத்தில் தோன்றியது அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
दिल्ली की बसों की व्यवस्था पूरी तरह से बदहाल हो चुकी हैं ।
— Delhi Buses (@DELHIBUSES1) April 17, 2024
दिल्ली मैट्रो से ज्यादा असुरक्षित हैं दिल्ली की बसें ।
यह तो एक छोटी सी घटना हैं हर रोज़ सैकड़ो लोगों की बसों में जेब कट रही हैं उसका जिम्मेदार कोन हैं....?#delhi #DelhiMetro #bus #DTC #CLUSTER #aap #BJP@kgahlot pic.twitter.com/FzEe26UuCe