1. Home
  2. தமிழ்நாடு

கடவுளின் உருவத்தை அந்த இடத்தில் பச்சை குத்திக்கொண்ட பெண்..!

Q

பூரி ஜெகன்நாதரின் புகைப்படத்தை வெளிநாட்டு இளம்பெண் ஒருவர், தொடையில் டாட்டூவாக குத்தி இருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், பக்தர்களின் மனதை புண்படுத்தும் நோக்கில் செயல்பட்டதாக சஹீத் நகரில் உள்ள சம்பந்தபட்ட டாட்டூ கடையின் உரிமையாளரையும், அவரது உதவியாளரையும் போலீசார் கைது செய்தனர்.

புவனேஷ்வரில் உள்ள அழகு நிலையத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் தனது தொடையில் டாட்டூ குத்தியுள்ளார். இது புகழ்பெற்ற ஜெகந்நாதரின் உருவமாகும். பெண் பச்சைக்குத்திக்கொள்ளும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இது மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் செயல் என்று கூறி கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஜெகந்நாதரின் பக்தர்கள் சாஹிர் நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஒரு பெண் தவறான இடத்தில் கடவுளின் உருவத்தை பச்சை குத்தியிருப்பது எங்களது உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. இது அனைத்து ஜெகந்நாதர் பக்தர்கள் மற்றும் இந்துக்களுக்கும் பெரிய அவமானமாகும். இதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like