#JUST IN : கோவையில் மூடப்படாத பாதாள சாக்கடையில் பெண் விழுந்த நிலையில், ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம்..!
கோவை காந்திபுரம் 100 அடி சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்தசூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு பாதாள சாக்கடை தூர்வாரப்பட்டு, ஆங்காங்கே பாதாள சாக்கடை மூடிகள் திறந்தபடியே கிடந்துள்ளன.
இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை இவ்வழியாக வந்த இளம்பெண் ஒருவர் பாதாள சாக்கடை மூடிகள் திறந்திருப்பதை கவனிக்காமல் திடீரென குழிக்குள் தவறி விழுந்தார்.
காலில் பலத்த காயமடைந்த அப்பெண்ணை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக பாதாள சாக்கடை குழிகளை மூடினர்.
இந்நிலையில் கோவையில் மூடப்படாத பாதாள சாக்கடையில் பெண் விழுந்த நிலையில், ஒப்பந்ததாரருக்கு ரூ.50000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற செயலில் ஈடுபடுவோர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
மேலும் காந்திபுரம் மாநகராட்சி உதவி செயற்பொறியாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் மாநகராட்சி ஆணையர்.
Just Now | மூடப்படாத பாதாள சாக்கடை - ஒப்பந்ததாரருக்கு அபராதம் | Kovai#kovai #News18TamilNadu pic.twitter.com/fL22SyMcwS
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 18, 2024
Just Now | மூடப்படாத பாதாள சாக்கடை - ஒப்பந்ததாரருக்கு அபராதம் | Kovai#kovai #News18TamilNadu pic.twitter.com/fL22SyMcwS
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 18, 2024