கதறி அழுத பெண் சிஆர்பிஎப் வீராங்கனை..! அதிர்ச்சி வீடியோ!
இது தொடர்பாக பொன்னை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும், காவல்துறை முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி கலாவதி காஷ்மீரில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அவர் கூறுகையில், "என் திருமணத்திற்காக சேர்ந்து வைத்திருந்த நகைகள், பட்டு புடவை மற்றும் ரொக்கப் பணம் திருடப்பட்டுள்ளது, இதுவரை விசாரணையில் முன்னேற்றம் இல்லை, யாரும் உதவவில்லை, என்ன செய்வது என தெரியவில்லை" என்று அழுதபடி வீடியோவில் பேசியிருந்தார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், புகார் அளித்த அடுத்த நாளே வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைரேகை நிபுணர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புகார்தாரரும் பெண் காவலரும் சந்தேகிக்கின்ற நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கலாவதி தனது முன்னாள் கணவரான சத்யா (ராணுவ வீரர்) மீது சந்தேகம் தெரிவித்தார். அவரிடமும் விசாரணை நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போது விசாரணை 80% வரை முடிவடைந்துள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருதாகவும் போலீசார் விளக்கமளித்துள்ளனர். விரைவில் திருடப்பட்ட நகைகள் மீட்கப்படும் என்றும் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் தீவிர கவனத்தை பெற்றிருப்பதோடு, காவல் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.