1. Home
  2. தமிழ்நாடு

பெண் காவலர் தற்கொலையில் பகீர் தகவல்..!

Q

மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி பகுதியைச் சேர்ந்த நாகையன் மகள் அபிநயா(29). நாகை மாவட்ட ஆயுதப்படைக் காவலரான இவர் நேற்று முன்தினம் இரவு நாகை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூல அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

நேற்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால், கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடியிருந்தது. இந்நிலையில், கருவூல பதிவேடுகள் அறை பகுதியில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.

கலெக்டர் அலுவலத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து சென்று பார்த்ததில், கழுத்து பகுதியில் துப்பாக்கியால் சுட்டு, அபிநயா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. நாகூர் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

விவாகரத்தான அபிநயா ஏற்கனவே திருமணமான வினோத் என்ற காவலரை காதலித்த நிலையில் அவரை மணக்க நினைத்தார். வினோத் கடந்த 1-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் மறைவுக்குப் பிறகு அபிநயா மனஉளைச்சலில இருந்திருக்கிறார். விசாரணை தொடர்ந்து நடக்கிறது.

Trending News

Latest News

You May Like