1. Home
  2. தமிழ்நாடு

வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லாத பெண் வேட்பாளர்..!

1

சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 11 தொகுதிகளில் மீதமுள்ள 7 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாகச் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் கோர்பா தொகுதியின் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் சாந்தி பாய் மராவி, 33, வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

பல கோடீஸ்வர வேட்பாளர்கள் ஏழு கட்டமாக நடைபெறும் இந்தியத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். பல கோடி செலவு செய்து வெற்றிக்காக பல வியூகங்களை வகுத்துச் செயல்பட்டு வரும் நிலையில், சில ஏழை வேட்பாளர்களும் இந்தத் தேர்தலில் களமிறங்கி உள்ளனர் என்பதுதான் சுவாரஸ்யமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

பல கோடீஸ்வர வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். பல கோடி செலவு செய்து வெற்றிக்காக பல வியூகங்களை வகுத்து வருகின்றனர். ஆனால் ஏழை வேட்பாளர்களும் இந்த தேர்தலில் களமிறங்கிறங்கியுள்ளனர் என்பதுதான் சுவாரஸ்யம்.

பைகா என்ற பழங்குடி வகுப்பைச் சேர்ந்த சாந்தி தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில், தனது வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய்கூட இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

தனது குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பாக ரூ.97,000 ரூபாயைக் கணக்கு காட்டியிருந்தார்.தங்களது பழங்குடியின கிராமத்திற்கு எவ்விதமான அடிப்படை வசதிகளும் இதுவரை அரசு செய்து கொடுக்கவில்லை என சாந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தலில் போட்டியிட பழங்குடியின வேட்பாளர்கள் ரூ.12,500 வைப்புத்தொகையாக செலுத்தவேண்டும் என்ற நிலையில், சாந்தியாலும் விவசாயப் பணிகளைச் செய்துவரும் அவரது கணவர் ராம்குமாராலும் இந்தத் தொகையைத் திரட்ட முடியவில்லை.

இதனால், அவரது சமூகத்தைச் சேர்ந்த மக்களிடம் பெறப்பட்ட நிதியை வைப்புத் தொகையாகச் செலுத்தியிருந்தார்.

தான் வெற்றிபெற்றால் உடனடியாக தங்கள் பகுதிக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தருவேன் என சாந்தி உறுதியளித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதே கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட சாந்தி, தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like