ஏ.டி.எம் மெஷினில் கை வைத்தது இதற்கு தான்- பெண்ணின்’பகீர்’வாக்குமூலம்..!!

ஈரோட்டில் கனிராவுத்தர் பகுதியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. அங்குள்ள ஏ.டி.எம் இயந்திரத்தின் வயர்களை பெண் ஒருவர் அறுத்துக் கொண்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பெண்ணை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தனது பெயர் நசிமா பானு என்றும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனக்கு ஒரு மகன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தறிப்பட்டறையில் பணியாற்றி வரும் பானுவுக்கு நிறைய இடங்களில் கடன் உள்ளது. அதை அடைக்கவே அவர் ஏ.டி.எம் இயந்திரத்தை அறுக்க முயன்றுள்ளார்.
இதையடுத்து நசீமா மீது கொள்ளை மற்றும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சம்பவ இடத்தில் அவர் பயன்படுத்திய சுத்தியல் மற்றும் வயர்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.