1. Home
  2. தமிழ்நாடு

யாருடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி- சீமான் முக்கிய அறிவிப்பு..!

1

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தலைமையில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அண்ணாமலையின் விமர்சனம் காரணமாக அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது. இனிமேல் ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது எனவும் அறிவித்தது. இதனையடுத்து பாஜக மாற்று கூட்டணியை அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. 

seeman

இந்த நிலையில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.   நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  வருகிற நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது, மக்களை நம்பியே தேர்தல் களம் காண்கிறோம் என கூறினார். இதுவரை இல்லாத நெருக்கடியை லியோ படத்திற்கு தமிழக அரசு கொடுத்து வருகிறது. விஜய் அரசியல் கட்சி துவங்க உள்ளதால் நெருக்கடி தருகின்றனர். திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது. இந்த உலகில் பல பேரரசுகள் வீழ்ந்தது போல், தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளும் வீழ்ந்து விடும். திமுக அரசு வாக்குறுதிகளை 100% நிறைவேற்றவில்லை. இவ்வாறு கூறினார். 
 

Trending News

Latest News

You May Like