1. Home
  2. தமிழ்நாடு

மது பிரியர்கள் ஷாக்...! இனி இந்த 4 பிராண்ட்கள் டாஸ்மாக்கில் கிடைக்காது..!

1

தமிழ்நாட்டில் அரசின் டாஸ்மாக் மூலம் மதுபான விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபானங்கள் விற்கப்பட்டு வருகின்றன.

டாஸ்மாக் கடைகளில் அவ்வப்போது புதிய வகை சரக்குகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வீரன் என்ற பெயரில் மதுபானம் விற்பனை செய்யப்படது. சமூக வலைத்தளங்களில் பலரும் இதை ட்ரோல் செய்யவும் தொடங்கினர். இந்த நிலையில் தான், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் ட்ரோபிகானா வி.எஸ்.ஓ.பி. பிராந்தி, ஓல்டு சீக்ரெட் பிராந்தி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி ஆகியவற்றை வாங்கி குடிக்கும் போது போதை ஏறுவதில்லை என்றும் எவ்வளவு மது அருந்தினாலும் 'சப்பென்று' இருப்பதாக மது பிரியர்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இந்த 3 வித மதுபானங்களின் தரத்தை ஆய்வு கூடத்தில் பரிசோதித்த போது, அதில் 3 வித மது பானத்திலும் ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், ஆல்கஹால் அளவு குறைவாக உள்ளதால், வீரன் ஸ்பெஷல் பிராந்தி (பேட்ச் எண் 082/2024) வி.எஸ்.ஓ.பி. ட்ரோபிகானா (பேட்ச் எண். 013/2020), ஓல்டு சீக்ரெட் பிராந்தி (பேட்ச் எண். 837/2018) ஆகியவை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்ததால் அவற்றை விற்பனை செய்ய வேண்டாம் என்று டாஸ்மாக் நிர்வாகம் ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இந்த வகை மதுபானங்கள் கடைகளில் இருப்பு இருந்தால் அதை மதுபான கிடங்குக்கு திரும்ப அனுப்புமாறு கடைக்காரர்களை டாஸ்மாக் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like