மது பிரியர்கள் ஷாக்..! வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மது பானங்களின் விலை உயர்கிறது..!
தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்திற்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 500 கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் தமிழகத்தில் தற்போது 4,829 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த டாஸ்மாக் கடைகளுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகும் மதுபானங்கள் விற்க்கப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சாதாரண மதுபான வகைகள் தான் அதிக அளவில் விற்பனை ஆகும். அவை சுமார் 40 சதவீத அளவுக்கு விற்பனையாகின்றன. குவாட்டர் பாட்டிலின் விலை ரூபாய் 130, ஆஃப் பாட்டில் விலை ரூபாய் 260, ஃபுல் பாட்டில் விலை ரூபாய் 520 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மீடியம் ரேஞ்ச் மதுபானங்கள் ரூபாய் 160 முதல் ரூபாய் 640 வரை விற்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிறுவனங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன. அந்த வருகையில் இந்த வருடம் (2024) வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி டாஸ்மாக் நிறுவனம் Liquor Price 10 முதல் 80 வரை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவலின் படி டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் சாதாரண மற்றும் நடுத்தர வகை குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூபாய் 10, ஆஃப் பாட்டிலுக்கு ரூபாய் 20, ஃபுல் பாட்டிலுக்கு ரூபாய் 40 விலை உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் பிரீமியம் வகையில் குவார்ட்டர் பாட்டில் ரூபாய் 20, ஆஃப் பாட்டில் ரூபாய் 40, ஃபுல் பாட்டில் ரூபாய் 80 மற்றும் அனைத்து வகையான பீர்களும் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.