1. Home
  2. தமிழ்நாடு

மது பிரியர்கள் உற்சாகம்..! பீர்களுக்கு ரூ.20 தள்ளுபடி ஆனால்...

1

வெயிலின் காரணமாக பீர்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது காலாவதி தேதி நெருங்கும் பீர்களுக்கு ரூ.20 தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 120 ரூபாய் கொடுத்து வாங்கும் ஒரு பீரின் விலை 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மது பிரியவர்கள் போட்டா போட்டி போட்டு பீர்களை வாங்கிச் செல்கின்றனர்.

பீர்கள் 6 முதல் 8 மாதம் வரை கெடாமல் இருக்க கால நிர்ணயம் உள்ளது. பீர் தயாரிக்கும் தொழிற் சாலைகளில் இருந்து வாங்கி வரப்படும் பீர் வகைகள் சில மதுபான கடைகளில் விற்பனை ஆகாமல் தேங்கியுள்ளது.அதோடு பண்டிகை காலங்களில் அதிக அளவில் பீர் வியாபாரம் ஆகும் என கருதி மதுக்கடை உரிமையாளர்கள் பெட்டி பெட்டியாக பீர் வகைகளை வாங்கி குடோன்களில் சேமித்து வைக்கின்றனர். ஆனால் எதிர்பார்த்தபடி பீர் வியாபாரம் ஆகாததால் பல நாட்கள் பீர்வகைகள் தேங்கி விடுகின்றன. இதனால் காலாவதி தேதி நெருங்கும் பீர்களுக்கு மதுபான கடைகள் ரூ.20 தள்ளுபடி அளித்து விற்பனை செய்கின்றன.

Trending News

Latest News

You May Like