1. Home
  2. தமிழ்நாடு

பிரபல WIN TV நிறுவனத்திற்கு சீல்..!

Q

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரும், தீவிர பாஜக ஆதரவாளருமான தேவநாதன் யாதவ், ரூ.525 கோடி நிதி மோசடி புகார் காரணமாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு செய்யப்பட்டார். போலீசாரால் கைது

மயிலாப்பூர் சுமார் 150 ஆண்டுகள் பழமையான 'தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்' நிறுவனத்தில் இயக்குனராக அவர் இருந்து வரும் நிலையில், தாங்கள் முதலீடு செய்த பணத்தை உரிய முறையில் திருப்பி தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்ததாக சுமார் 140 பேர் புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில் தேவநாதன் யாதவ், அவருக்கு உடந்தையாக இருந்த குணசீலன் மற்றும மகிமைநாதன் ஆகியோர் கடந்த 13ஆம் தேதி கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக WIN TV உரிமையாளர் தேவநாதன் வீடு உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், ரூ.4 லட்சம் பணம், 2 கார்கள், ஹார்டு டிஸ்க்குகள், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. தொடர்ந்து, நிதி நிறுவனம், தேவநாதனின் தனியார் தொலைக்காட்சி (WIN TV) நிறுவனத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like