1. Home
  2. தமிழ்நாடு

'சீரழிக்கவில்லை' என பிரபாகரன் மீது சத்தியம் செய்வீங்களா? சீமானை கிழித்து தொங்கவிட்ட விஜய லட்சுமி...

1

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியாரை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார். சீமானின் தந்தை பெரியாறு குறித்த சர்ச்சை பேச்சுக்கு திமுக உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து. இது தொடர்பாக சீமான் மீது சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. என் விருப்பமான ஒன்றும் பெரியார் குறித்த அவமதிக்கும் வகையில் பேசியிருக்கிறார். தற்போது சீமானை கண்டித்து நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில் விஜயலட்சுமி கூறியுள்ளதாவது:-

சீமான்.. எப்படி எப்படி? பெண்ணுரிமை பேச பெரியாருக்கு எல்லாம் தகுதி கிடையாது.. பிரபாகரனுக்கு மட்டும்தான் அருகதை இருக்கிறதா? ஓகே சீமான்.. என் கேஸில் வளசரவாக்கம் காவல்நிலையத்துக்கு வரவழைத்த போது, கொல்லையில் இத்தனை பெண்கள் இருக்கும் போது பழகுவதற்கு விஜயலட்சுமிதான் கிடைத்தாரா? என மனைவி கயல்விழி கேட்டதாக அவரை வைத்துக் கொண்டே செய்தியாளர்களிடம் சிரித்தபடியே சொன்னதும் நீங்கதானே சீமான்.. என் வாழ்க்கையை சீரழித்துவிட்டு கேடு கெட்ட இப்படி ஒரு பதிலை சொன்ன சொன்னது உங்க மனைவியா?

சீமான்.. ஏதோ சொடக்கு போட்டீங்களே.. உண்மையான ஆணாக இருந்தால் பிரபாகரன் மீது சத்தியம் செய்து விஜயலட்சுமியின் வாழ்க்கையை சீரழிக்கவே இல்லை என சொல்ல தைரியம் இருக்கிறதா? நான் விஜயலட்சுமியின் கணவர் இல்லை.. மாதம் ரூ 50,000 பணம் தருவதாக சொல்லவில்லை என சத்தியம் செய்ய தயாரா? இவ்வாறு நடிகை விஜயலட்சுமி பேசியுள்ளார்.

Trending News

Latest News

You May Like