1. Home
  2. தமிழ்நாடு

இந்த வருஷமாவது இலவச லேப்டாப் தருவீங்களா..?

1

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடனும், மாணவர்களின் திறன்களை அதிகரிக்கவும் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை 2011ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த இலவச லேப்டாப் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் எஞ்சினீயரிங் மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் படிக்க பேருதவி புரிந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இலவச லேப்டாப் திட்டம் நிறுத்தப்பட்டதாக அதிமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில், அதிமுக அரசால் தொடர்ந்து சிறப்புற வழங்கப்பட்டு வந்த லேப்டாப்கள் திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இன்னும் சில நாட்களில் புதிய கல்வியாண்டு தொடங்கும் நிலையில், இந்த ஆண்டிற்கான லேப்டாப்களை வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் திமுக அரசு வெளியிடாமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்றும் கூறியுள்ளார்.

மேலும், “முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே.. லேப்டாப் வழங்க வேண்டும் என்ற மாணவர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பை இந்த ஆண்டாவது உங்கள் திமுக அரசு நிறைவேற்ற முன்வருமா? அல்லது அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்ற காழ்ப்பில் இந்த ஆண்டும் ஏதேனும் நொண்டிச் சாக்கு சொல்லப் போகிறீர்களா?” என்றும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், லேப்டாப் எங்கே ஸ்டாலின் என்ற ஹாஷ் டேக்கையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like