இப்படி கூட மரணம் வருமா..? கிளாஸுக்குள் மயங்கி விழுந்து பலியான மாணவி - அலறிய தோழிகள்..!
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு.
நேற்று வகுப்பறை நடந்து கொண்டிருந்த போது மாணவி திடீரென மயங்கி விழுந்தார்
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
#JUSTIN ராணிப்பேட்டை அருகே வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு#Ranipet #sumaithangi #school #News18Tamilnadu |https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/FNqqKzcL28
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 10, 2024
மாணவிக்கு முதலுதவி அளித்து மருத்துவமனை அழைத்து சென்ற நிலையில் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்..
இந்நிலையில் வகுப்பறையில் மாணவி மயங்கி விழுந்த அதிர்ச்சிகர சிசிடிவி வெளியாகியுள்ளது.
இதய குறைபாடு காரணமாக மாணவி உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.