இப்படி கூட மரணம் வருமா..? இளம் பெண்ணின் உயிரைப் பறித்த அரளிப்பூ..!
கேரளாவை சேர்ந்தவர் சூர்யா சுரேந்திரன்.மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்லவிருந்த சூர்யா, மொபைலில் பேசிக் கொண்டே வீட்டின் அருகே இருந்த அரளிச்செடியின் இலை, பூவை மென்று தின்றுள்ளார். கசப்பாக இருந்ததால் உடனே துப்பிவிட்டார். விமான நிலையத்திற்குச் செல்லும் போது சூர்யா குமட்டல் மற்றும் வாந்தி எடுத்ததோடு, திடீரென சுருண்டு விழுந்தார். உடனே பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை காப்பாற்ற முடியவில்லை. அரளி செடியின் இலைகள் மற்றும் பூக்களை மென்று தின்றுவிட்டதாக சூர்யாவே மருத்துவர்களிடம் கூறியிருந்தார்.
அரளிப்பூ மற்றும் இலையை சிறிதளவு உட்கொண்டாலும் மரணம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது மாரடைப்பை ஏற்படுத்தும். அரளியை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அரளிப்பூ மற்றும் இலையை சிறிதளவு உட்கொண்டாலும் மரணம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது மாரடைப்பை ஏற்படுத்தும். அரளியை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.