1. Home
  2. தமிழ்நாடு

முரளியை AI தொழில்நுட்பத்தில் கொண்டு வருவீர்களா?... அதர்வா கொடுத்த பதில்!

1

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது டி என் ஏ படத்தின் மூலம் ஒரு வணிக-விமர்சன வெற்றியைப் பெற்றுள்ளார் அதர்வா. இந்த படத்தில் அவருடன் நிமிஷா சஜயன் நடிக்க நெல்சன் வெங்கடேசன் இயக்கினார். ஒலிம்பியா பிக்சர்ஸ் அம்பேத்குமார் தயாரித்திருந்தார்.

இந்த படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக மதுரை வந்த அதர்வாவிடம் “விஜயகாந்த் போல முரளியையும் ஏ ஐ தொழில்நுட்பத்தில் கொண்டு வருவீர்களா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “அதற்கான திரைக்கதை வேண்டும். இப்போதைக்கு அது மாதிரி எந்த திட்டமும் இல்லை.  ஆனால் எதிர்காலத்தில் வருமா வராதா என்று தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like