1. Home
  2. தமிழ்நாடு

விஜய் கட்சியில் இணைந்தாரா வெற்றிமாறன்? உண்மை நிலவரம் இது தான்..!

1

தவெகாவின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது தமிழக வெற்றிக் கழக, நிர்வாகிகள் நியமனத்தில் கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே நான்கு கட்டங்களாக மாவட்ட செயலாளர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை வடக்கு மாவட்ட செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட விஜய் அன்பன் அழகர் கோவிலில் மாட்டுவண்டி பந்தயம் நடத்தினார். இந்த நிகழ்வில் இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன, வெற்றியாளர்களுக்கு பல பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டு அனைவரையும் வாழ்த்தினார். மேலும் தவேக நிர்வாகிகள் மிகப்பெரிய மாலையை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக வெற்றிக் கழக (தவேக) நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றி மாறன் பங்கேற்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அவர் பங்கேற்றதை தொடர்ந்து பலரும் வெற்றிமாறன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துவிட்டார் என்று ஊகித்தனர். ஆனால், தற்போது வெளியான தகவலின்படி மாட்டுவண்டிப் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக தான் வெற்றிமாறன் பங்கேற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. வெற்றி மாறன் தனது வரவிருக்கும் திரைப்பட வேலைகள் தொடர்பாக மதுரையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News

Latest News

You May Like