இப்படி கூட நடக்குமா ? பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த வார்டு பாய்..!
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தின் ஹர்தயா பகுதியில் இயங்கி வரும் பஸ்தி மல்டி ஸ்பெஷாலிட்டி தனியார் மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஆபரேஷன் தேட்டரில் நிர்வாணமாக மயக்க நிலையில் நிலையில் இருந்த பெண்ணுக்கு மருத்துவர்களுடன் சேர்ந்து வார்டு பாய் அறுவை சிகிச்சை செய்து அதை வீடியோ எடுத்து தனது வாட்ஸப் ஸ்டேட்டஸாக வைத்துளான். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மருத்துவமனையின் இயக்குனர் சஞ்சய் குமாரின் வழிகாட்டுதலின்படியே தான் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டதாக அந்த வார்டு பாய் தெரிவித்துள்ளான். ஆனால் இதை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தை உரிய முறையில் விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாகப் போலீசும் விசாரணை நடத்தி வருகிறது.