1. Home
  2. தமிழ்நாடு

இப்படி கூட நடக்குமா ? பார்பிகியூ சிக்கன் சமைத்து சாப்பிட்ட 2 பேர் மரணம்..!

1

திருச்சி மற்றும் சென்னையை சேர்ந்த 4 இளைஞர்கள் கொடைக்கானல் அருகே சின்னபள்ளம் செல்லும் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்தனர்.

அப்போது, ஜெயகண்ணன், ஆனந்த் பாபு ஆகியோர் மது அருந்திக்கொண்டே பார்பிகியூ சிக்கன் சமைத்து சாப்பிட்டுள்ளார். சமையலுக்கு தேவையான பொருட்களைத் திருச்சியிலிருந்து இவர்கள் கொண்டு வந்துள்ளனர்.அப்போது அடுப்பை அணைக்காமல் இருவரும் தூங்கச் சென்றுள்ளனர். மற்றொரு அறையிலிருந்த நண்பர்கள் காலை வந்து எழுப்பியபோது இருவரும் இறந்து கிடந்துள்ளனர்.

சிக்கன் சமைத்த அடுப்பை அணைக்காததால் எழுந்த புகை காரணமாக இருவரும் மரணம் அடைந்ததாகப் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிந்துள்ள காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like