1. Home
  2. தமிழ்நாடு

இப்படி கூட நடக்குமா ?வங்கி லாக்கரில் இருந்த 18 லட்சம் ரூபாய் பணத்தை கரையான் அரித்தது..!

1

உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்த அல்கா பதக் என்ற பெண்மணி, கடந்த 2022-ம் ஆண்டு  தனியார் வங்கியின் ஆஷியானா கிளையில் உள்ள தன்னுடைய லாக்கரில் தன் மகளின் திருமணத்துக்காக 18 லட்சம் ரூபாய் அவர் சேமித்து வைத்திருந்தார்.

சமீபத்தில் லாக்கர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க அல்கா பதக்கை வங்கி ஊழியர்கள் அழைத்தனர். இதன்படி வங்கிக்கு வந்த அவர் தனது லாக்கரை திறந்து பார்த்தார். அப்போது, அதில் வைக்கப்பட்டிருந்த 18 லட்சம் ரூபாய் ரொக்கம் கரையான்களால் அரிக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

இது குறித்து வங்கி ஊழியர்களிடம், அல்கா பதக் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து வங்கி தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். பதிலுக்காக காத்திருக்கிறோம் என வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.  

Trending News

Latest News

You May Like