இப்படி கூட நடக்குமா ? ரூ. 18 லட்சத்தை அரித்த கரையான்கள்.. வங்கி லாக்கரில் நடத்த சம்பவம்..!

உ.பி மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் அல்கா பதக். இவர் தனது மகளின் திருமணத்திற்காக ஒன்றரை ஆண்டுகளாக சுமார் 18 லட்சம் ரூபாய் பணத்தையும் மற்றும் சில நகைகளை பாங்க் ஆப் பரோடா வங்கி லாக்கரில் வைத்திருந்தார். இந்த நிலையில் KYC சரிபார்ப்பு மற்றும் வருடாந்திர லாக்கர் பராமரிப்புக்காக அவரை வங்கி அதிகாரிகள் அழைத்தனர்.
அப்போது, லாக்கரை செக் செய்த அல்கா பதக்-க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பணத்தையும் நகையும் பாதுகாப்பாக வைத்திருந்த லாக்கரில் பணத்தை கரையான் அரித்து பணம் மொத்தமும் அழிக்கப்பட்டது தெரிய வந்தது. நோட்டுகள் கரையான்களால் சேதப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டு, வங்கி அதிகாரிகளிடம் அவர் தெரிவித்ததாக தெரிகிறது. அல்கா பதக் சிறுதொழில் நடத்துவதோடு, டியூஷன் வகுப்புகளையும் எடுத்து வரும் அவர் பணத்தை லாக்கரில் வைத்திருந்தார்.
ஆனால் பணத்தை சேமிப்பதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து தனக்குத் தெரியாது என்று ஒப்புக்கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்காக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் வங்கி லாக்கரில் இதுப்போன்ற காதிங்களை வைக்க கூடாது பலரும் தெரிந்துக்கொண்டனர். பொதுவாக வங்கிகள் லாக்கரின் தட்பவெட்ப நிலையை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை எடுக்கும். குறிப்பாக மழை நீர் ஓழுகுதல், கரையான் போன்ற பிரச்சனைகளுக்கு பாதுகாப்பு பணிகளை செய்யும்.
அதேபோல், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பெண் ஒருவர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் லாக்கரில் ரூ.2.15 லட்சத்தை வைத்திருந்தார். அந்த பெண் ரூ.2 லட்சத்தை துணி பையில் பாதுகாப்பாக வைத்துவிட்டு, மீதமுள்ள ரூ.15,000 வெளியில் வைத்திருந்ததாக தெரிகிறது. 2 லட்சத்துடன் வீடு திரும்பிய அவர், வீட்டுக்கு சென்று பணத்தை பார்த்த போது கரையான் தின்றுவிட்டதை அறிந்து பதறிபோனார்.