இப்படி கூட நடக்குமா ? மனைவியை கணவனே விபசாரத்தில் தள்ளிய கொடூரம்!
இதனைத் தொடர்ந்து இளம் பெண்ணிடம் உறவினர்கள் விசாரணை மேற்கொண்டதில் தனது கணவரான தமிழ்செல்வன் தன்னை ஆபாசமாகப் புகைப்படம், வீடியோ எடுத்து அதனை இணையதளம் மூலமாகப் பிறருக்கு அனுப்பினர். பின்னர் அவர்களிடம் என்னைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகப் பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார். இளம் பெண்ணின் குற்றச்சாட்டைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மணமகனை அழைத்து விசாரிக்க முடிவு செய்தனர்.
ஆனால், அதற்கு முன்பாகவே பாதிப்புக்குள்ளான இளம்பெண் தற்கொலை முயற்சியாக விஷம் அருந்தினார். இதனை அறிந்த பெண்ணின் உறவினர்கள் உடனடியாக அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாகத் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர் இளம் பெண்ணிடம் புகாரைப் பெற்றுக் கொண்டனர்.
இளம்பெண் அளித்த தகவலின் அடிப்படையில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தமிழ்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.