இப்படி கூட நடக்குமா ? 10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் குடித்த சிறுமி வாயில் நுரை தள்ளி உயிரிழப்பு...!
திருவண்ணாமலை செய்யாறு கனிகிலுப்பை கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினர் ராஜ்குமார் - ஜோதிலட்சுமி. இவர்களுடைய மகள் 6 வயது காவியா. இவர் வீட்டுக்கு அருகில் உள்ள கடையில் ரூ.10-க்கு கூல்ட்ரிங்ஸ் வாங்கி குடித்துள்ளார். DAILEE என்ற குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்திலேயே காவியா வாயில் நுரைத்தள்ளியது.அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தை காவியாவை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி காவியா உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பின்னரே சிறுமி காவியா குளிர்பானத்தால் சிறுமி உயிரிழந்தாரா என்பது தெரியவரும். இச்சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது குழந்தை மரணத்திற்கு மலிவு விலை குளிர்பானமே காரணம். உடனடியாக இந்த குளிர்பான விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என காவியாவின் தந்தை தெரிவித்துள்ளார்.