1. Home
  2. தமிழ்நாடு

இப்படி கூட நடக்குமா ? அரசு மருத்துவமனை லிப்ட்ல் 2 நாட்களாக சிக்கிய முதியவர்... மயக்க நிலையில் மீட்பு..!

1

கடந்த சனிக்கிழமை காலை முதுகு வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்துள்ளார் அதே பகுதியை சேர்ந்த ரவீந்திரன் நாயர்.அங்கு மருத்துவரை சந்தித்த ரவீந்திரன் தனது சில மருத்துவ ஆவணங்களை எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றார்.

பின்னர் மதிய வேளையில் மருத்துவமனைக்கு திரும்பிய ரவீந்திரன், தரை தளத்தில் இருந்து முதல் தளத்திற்கு செல்வதற்காக லிப்டில் ஏறியுள்ளார். சிறிது நேரத்தில் லிப்ட் திடீரென பலமாக குலுங்கி பழுதடைந்து அப்படியே நின்றுவிட்டது. இந்த சம்பவத்தின் போது ரவீந்திரனின் செல்போன் கீழே விழுந்து உடைந்தது. இதனால் அவரால் யாரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை. இதையடுத்து அவர் லிப்டில் இருந்த அலாரம் பட்டனை அழுத்தியுள்ளார். ஆனால் அலாரம் வேலை செய்யவில்லை.

வெகுநேரமாக மருத்துவமனைக்கு சென்ற ரவீந்திரன் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் உள்ள போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். 

லிப்ட் ஆபரேட்டரை வரவழைந்து லிப்டை திறந்து பார்த்தபோது, ரவீந்திரன் களைத்துப்போய் தரையில் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.கடந்த 2 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் ரவீந்திரன் லிப்டில் சிக்கியிருந்ததால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் திங்கட்கிழமை லிப்ட் ஊழியர் பணிக்கு வந்த பிறகே ரவிந்திரன் மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், லிப்ட் ஆபரேட்டர் உட்பட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Trending News

Latest News

You May Like