இப்படி கூட நடக்குமா ? பிரென்சு பிரைஸ் சாப்பிடாதனு சொன்ன கணவா் மீது கிரிமினல் வழக்கு!
பெங்களூரு பசவனகுடி பகுதியில் 29 வயது பெண் ஒருவா் வசித்து வருகிறார்.அவரது கணவா் அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
அந்த பெண் கா்ப்பமாக இருந்ததால் மனைவியை பெங்களூருவில் வைத்துவிட்டு கணவன் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். இதற்கிடையே அந்த தம்பதிக்கு அண்மையில் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்கு பிறகு அந்த பெண்ணுக்கு உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்டவை இருந்துள்ளது.
இதனால் தனது மனைவிக்கு அமெரிக்காவில் உள்ள கணவா் உணவு கட்டுப்பாடு விதித்துள்ளார். அதாவது எண்ணெய் பொருட்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கும்படி கூறி உள்ளார். அப்போது தான் உடல் ஆரோகியமாக இருக்கும் என கூறியதாக தெரிகிறது. ஆனால் வீட்டில் சும்மா இருக்கும் சமயங்களில் அந்த பெண்ணுக்கு பிரென்ச் பிரைஸ் சாப்பிட பிடிக்கும் என தெரிகிறது. ஆனால் அதற்கு அவரது கணவா் மறுத்துள்ளார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து சண்டை முற்றிய நிலையில், அந்த பெண் பெங்களூரு பசவனகுடி மகளிர் போலீசில் தனது கணவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
அப்போது தனக்கு பிடித்த பிரென்ச் பிரைஸை தனது கணவா் சாப்பிட அனுமதிக்கவில்லை என கூறி அவா் மீது புகார் அளித்தார். அந்த புகாரை போலீசாரும் பெற்று கொண்டனா். இதுதொடா்பாக அமெரிக்காவில் உள்ள பெண்ணின் கணவருக்கு லுக் அவுட் நோட்டீசும் பிறக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவா் விசாரணைக்காக பெங்களூருவுக்கு வந்தார். மேலும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியும் உள்ளார். எனினும் வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தபாடில்லை. இதனை தொடா்ந்து கணவா் தரப்பில் மனைவியின் புகாருக்கு எதிராக கர்நாடக உயா் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை அண்மையில் நீதிபதி நாகபிரச்சன்னா அமா்வில் நடைபெற்றது. அப்போது மனுதாரரின் நிலை குறித்து வாதங்களை கேட்ட நீதிபதி, "அமெரிக்காவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் மனுதாரா் மனைவியின் புகாரால் வேலையை இழக்கும் நிலையில் உள்ளார். உடல் ஆரோகியத்தை கருத்தில் கொண்டு தான் தனது மனைவிக்கு உணவு கட்டுப்பாடு விதித்துள்ளார். தற்போது அவா் மீது நடவடிக்கை எடுத்தால் சட்டத்தை மீறிய செயலாக அது கருதப்படும். எனவே மனுதாரா் மீதான கிரிமினல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.