இப்படி கூட நடக்குமா ? மருத்துவமனையில் சேர்த்ததோ காய்ச்சலுக்காக... சிகிச்சை கொடுத்தது வெறிநாய்க்கடிக்கு..!
நாகர்கோவில் அருகே தேரேக்கால் பகுதியைச் சேர்ந்தவர் தனிஷ். இவரது மனைவி ஷைனி. இந்த தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த 25-ம் தேதி அந்த குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் உடல்சோர்வு ஏற்பட்டது. இதையடுத்து, நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள ஜெயசேகரன் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது.
எந்தவித முறையான பரிசோதனை செய்யாமல், வெறிநாய்க்கடிக்கு சிகிச்சை அளிப்பதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு குழந்தைக்கு வெறிநாய்க்கடி என கண்டறியப்பட்டு ரேபிஸ் நோய்க்கான சிகிச்சை அளித்ததாக தாய் ஷைனி தெரிவித்தார். ஒரு கட்டத்தில், குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் தாய் ஷைனி குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, கேரளாவில் உள்ள NIMS மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டவுடன், குழந்தைக்கு எலி காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.