1. Home
  2. தமிழ்நாடு

2015 போன்று இந்த ஆண்டும் சென்னயைில் வெள்ளம் வருமா?

2015 போன்று இந்த ஆண்டும் சென்னயைில் வெள்ளம் வருமா?


சமீபத்தில் சில மணி நேரங்கள் பெய்த மழைக்கே சென்னை தண்ணீரில் தந்தளித்ததை அடுத்து 2015ஆம் ஆண்டு போன்று இந்த முறையும் வெள்ளம் வருமா என்று கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பலரும் கடுமைாக பாதிக்கப்பட்டனர். வெள்ளம் ஏற்பட்ட செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டதே காரணம் என கூறப்பட்டது.

ஆனால் தண்ணீர் திறக்காமல் இருந்திருந்தால் அணை உடைந்திருக்கும் என அரசு கூறியது. ஏரியில் இருந்து தண்ணீர் திறந்தது மற்றும் மழை நீர் சேர்ந்து பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியதாக ஒரு தரப்பினர் கூறினர்.

2015 பெரு வெள்ளம் போல் இனி ஏற்படக்கூடாது என ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழு நடத்திய ஆய்வில் சென்னையில் பல இடங்களில் மழை நீர் வடிகால் இல்லாததும், இருந்தும் பழுதாகி இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் அளித்த பரிந்துரையின் பேரில் 290 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.

2019 பிப்ரவரிக்குள் பணிகள் முடிக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் அந்தப்பணி இப்போது வரை முடியவில்லை. மேலும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பும் 2015 பெரு வெள்ளத்திற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. 2015ஆம் ஆண்டு பெய்த மழையை விட இந்த ஆண்டு அதிக மழை பெய்யும் என ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர். அதற்கு கார்பன் வாயு அதிகரிப்பே காரணம் என சொல்லப்படுகிறது.

எனவே நீர் நிலைகள் மேலாண்மை மட்டும் வெள்ளத்தை தடுக்க ஒரே வழி. 2015ஆம் ஆண்டு பெய்தது போல் இந்த ஆண்டு மீண்டும் மழை பெய்தால் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like