சென்னையில் குடிநீர் பஞ்சம் வருமா ? : அமைச்சர் கே.என்.நேரு சொல்வதென்ன..!
சென்னை பெரம்பூர் காமராஜர் நகரில் 2 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகர்ப்புற சுகாதார நிலையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
டெங்கு ஒழிப்பிற்காக மாநகராட்சி சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. சென்னையில் குடிநீருக்கு பஞ்சம் ஏற்படாது. அனைத்து ஏரிகளிலும் போதிய அளவு நீர் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.