1. Home
  2. தமிழ்நாடு

ஞாயிற்றுக்கிழமை போட்டித் தேர்வு நடக்குமா?- டி.என்.பி.எஸ்.சி. அளித்த முழு விளக்கம் !!

ஞாயிற்றுக்கிழமை போட்டித் தேர்வு நடக்குமா?- டி.என்.பி.எஸ்.சி. அளித்த முழு விளக்கம் !!

தமிழகத்தில் 8 , 9 ஆம் தேதிகளில் திட்டமிட்டபடி எழுத்துத் தேர்வுகள் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதையடுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய நாளில் நடைபெற இருந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடைபெறுமா என்ற குழப்பம் தேர்வர்கள் மத்தியில் இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை போட்டித் தேர்வு நடக்குமா?- டி.என்.பி.எஸ்.சி. அளித்த முழு விளக்கம் !!

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் பி.உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ஊரடங்கு நாளன்று போட்டித் தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி என்ற தலைப்பில் வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை போட்டித் தேர்வு நடக்குமா?- டி.என்.பி.எஸ்.சி. அளித்த முழு விளக்கம் !!

இதனைத் தொடர்ந்து தேர்வாணையத்தினால் ஏற்கனவே 8ஆம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 9ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை மற்றும் பிற்பகலில் நடத்தப்படுவதாக இருந்த தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலை பணிகளில் அடங்கிய கட்டிடக்கலை, திட்ட உதவியாளர், ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுகள் எவ்வித மாற்றமும் இல்லாமல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது, இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like