மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 கன்பார்ம் வருமா? பெண்களே ஆகஸ்ட் 28ம் தேதி முக்கியமான நாள்..!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு புதியதாக விண்ணப்பித்தவர்களில் முதல் கட்டமாக யார் யாருக்கெல்லாம் ரூ.1000 வரும் என்பதை இந்த தேதிக்குள் கட்டாயம் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு உங்களுடன் ஸ்டாலின் முகாமை ஜூலை 15 ஆம் தேதி தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, முதியோர் ஓய்வூதியம், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம், ரேஷன் கார்டு தொடர்பான மற்ற கோரிக்கைகள், தொழில் தொடங்க கடனுதவி என்பது உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட சேவைகளுக்கு மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தாலுகாவிலும் இந்த முகாம்கள் பகுதி வாரியாக நடைபெற்று வருகிறது. அதில், மேலே குறிப்பிட்டதுபோல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, முதியோர் ஓய்வூதியம், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் உள்ளிட்ட சேவைகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மனு அளித்து வருகின்றனர்.
குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி அதிக பெண்கள் ஆர்வமாக மனு அளித்து வருகின்றனர். அத்துடன் தங்களுடைய விண்ணப்பம் ஏற்கப்படுமா? நிராகரிக்கப்படுமா? என்ற பெரும் ஆர்வத்தில் இருக்கின்றனர்.அதன்படி, ஜூலை 15 ஆம் தேதி மனு அளித்தவர்களுக்கு ஆகஸ்டு 28 ஆம் தேதியுடன் 45 நாட்கள் நிறைவடைகிறது. எனவே அன்றைய நாளில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அப்டேட் தமிழ்நாடு அரசின் சார்பில் கிடைக்கப்போகிறது.
அதில், ஜூலை 15ல் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களில் யாருடைய மனுக்கள் எல்லாம் ஏற்கப்பட்டுள்ளன, யாருடைய மனுக்கள் எல்லாம் நிராகரிக்கப்பட்டுள்ளன என்ற விவரம் தெரியவரப்போகிறது. மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் ஏன் நிராகரிக்கப்பட்டது என்ற காரணமும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஒருவேளை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்த பெண்களின் மனுக்கள் ஏற்கப்பட்டிருந்தால், எப்போது ஆயிரம் ரூபாய் உங்களின் வங்கி கணக்குக்கு வரும் என்ற விவரத்தை அரசு விரைவில் அறிவிக்கும். ஆகஸ்டு 28 ஆம் தேதியில் இருந்து யாருடைய மனுக்கள் ஏற்கப்பட்டிருக்கிறது, நிராகரிக்கப்பட்டிருக்கிறது அல்லது எந்த நிலையில் இருக்கிறது என்ற விவரத்தை விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு தெரிவிக்கும்.
.png)