1. Home
  2. தமிழ்நாடு

மூத்த குடிமக்கள் சலுகை நிறுத்தப்பட்டதால் ரயில்வே துறைக்கு இத்தனை கோடி மிச்சமா..?

1

பயணிகளுக்கு வழங்கிய சேவைகள் நிறுத்தப்பட்ட காரணத்தால் ரயில்வே துறைக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது. கொரோனா பிரச்சினை வரும் வரை, மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் டிக்கெட் சலுகை வழங்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த சலுகை நிறுத்தப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட் சலுகையை நிறுத்தியதால் இந்திய ரயில்வேக்கு சுமார் 5,800 கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது. இந்த தகவல் ஆர்டிஐயின் கீழ் தெரியவந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணச் சலுகைகளைத் திரும்பப் பெற்ற பிறகு மூத்த குடிமக்களிடமிருந்து இந்திய ரயில்வே ரூ.5,800 கோடி கூடுதல் வருவாயைப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

2020ஆம் ஆண்டின் மார்ச் 20ஆம் தேதியன்று கொரோனா தொற்றுநோய் காரணமாக நாடு தழுவிய லாக்டவுன் அறிவிக்கப்பட்ட பிறகு, மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் வழங்கப்பட்ட சலுகையை ரயில்வே அமைச்சகம் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அதுநாள் வரை பெண் பயணிகளுக்கு 50 சதவீதம் மற்றும் ஆண் மற்றும் திருநங்கைகளுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடியை இந்திய ரயில்வே வழங்கி வந்தது. ஆனால் இப்போது அந்த சலுகை எதுவும் வழங்கப்படவில்லை.

Trending News

Latest News

You May Like