1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் முதியோர் சலுகை ரயில் கட்டணம் வருமா ? ரயில்வே வாரியம் விளக்கம்..!

1

ரயில் சேவை கட்டணத்தில் முதியவர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் பாதி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.ஆனால் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்கும் வகையில் அரசு முதியவர்களுக்கான இந்த சிறப்பு கட்டண சலுகையை ரத்து செய்து முழு கட்டணத்தையும் வசூலித்தது. தற்போது இயல்பு நிலை திரும்பி பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில் மீண்டும் முதியவர்களுக்கான ரயில் கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும் என்று பல தரப்புகளில் இருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

பொதுவாகவே 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சலுகைகள் வழங்கப்படுவது வழக்கம். மற்ற குடிமக்களை விட மூத்த குடிமக்களுக்கு கூடுதல் சலுகை கிடைக்கும். அதேபோல, ரயில்களிலும் மூத்த குடிமக்களுக்கும் டிக்கெட் செலவில் குறிப்பிட்ட அளவில் சலுகை வழங்கப்பட்டு வந்தது.கொரோனா சமயத்தில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த டிக்கெட் சலுகையை ரயில்வே அமைச்சகம் நிறுத்தியது.

இது குறித்து ரயில்வே வாரியம், பயணிகளுக்கு நூறு ரூபாய் மதிப்பிலான டிக்கெட் ₹55 என்ற மானிய விலையில் தான் வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. இதனால் மீண்டும் சலுகை கட்டணம் அமலுக்கு வராது என்று தெரிய வருகிறது. இருப்பினும் புற்றுநோய் போன்ற சில தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு வழங்கப்படும் கட்டண சலுகைகள் தொடரும் எனறும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like