1. Home
  2. தமிழ்நாடு

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா..? அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் இது தான்..!

1

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து சட்டப்பேரவையில் எம்எல்ஏ எழிலரசன் கேள்வி எழுப்பினார். இதற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். மத்திய அரசு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (யுபிஎஸ்) அறிமுகப்படுத்தியுள்ளது என்று அவர் சட்டசபையில் தெரிவித்தார். இது முதன்மையாக அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தை உறுதிப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் மற்றும் விரிவான நடைமுறைகளை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார். அவை கிடைத்ததும், நமது மாநிலத்திற்கு ஏற்ற ஓய்வூதிய திட்டத்தை வகுக்க, முதலமைச்சருடன் கலந்தாலோசித்து புதிய குழு அமைக்கப்படும். இந்தக் குழுவின் பரிந்துரைகளின்படி, தமிழகத்தில் ஓய்வூதியத் திட்டத்தை திறம்பட செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று சட்டசபையில் உறுதியளித்தார்.

தமிழ்நாட்டிற்கு புதிய ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஊழியர்களிடையே அதிகரித்து வருகிறது. இருந்தும் தமிழக அரசு இந்த கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டம் ஆகிய இரண்டிலிருந்தும் கணிசமாக வேறுபடும் யுபிஎஸ் எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி, இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், ஊழியர்களுக்கு நிறைய பலன்கள் கிடைக்க உள்ளது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, ​இந்தியாவில் இரண்டு வகையான ஓய்வூதியத் திட்டங்கள் செயல்படுகின்றன, ஒன்று பழைய ஓய்வூதியத் திட்டம் இன்னொன்று புதிய ஓய்வூதியத் திட்டம். இந்த திட்டங்கள் ஒரு மாநிலத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்கும் வேறுபடும். இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ. 10,000 கிடைக்கும். அரசு ஊழியர் பனியின் போது இறந்தால், அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 60 சதவீதம் குடும்பத்துக்கு ஓய்வூதியமாக வழங்கப்படும் என இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.

Trending News

Latest News

You May Like