உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்துள்ள 4000 திருநங்கைகள் - அரசு பரிசீலனை செய்யுமா ?

தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக ஒரு கோடிக்கும் மேலான குடும்பத் தலைவிகளுக்கு வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. உரிய தகுதிகள் இருந்தும் ரூ.1000 கிடைக்கப் பெறாத குடும்ப தலைவிகள் மனுவை மேல் முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் திருநங்கைகள் தங்களுக்கு உரிமை தொகை கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை கண்ணகி நகரில் உள்ள திருநங்கை விழிகள் அமைப்பு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது, திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கினால் அது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுமார் 4000 பேர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனை அரசு பரிசீலனை செய்து உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.