வங்கி ஊழியர்களுக்கு இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை..?

இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இயங்கி வருகின்றன. பொதுவாக, வங்கி ஊழியர்களுக்கு இரண்டாவது, நான்காவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை தினங்களில் விடுமுறை வழங்கப்படுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வங்கிக்கு அதிகப்படியான லாபம் கிடைத்து வருவதனால் வங்கி ஊழியர்களின் சுமையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து சனிக்கிழமையும் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது போக, பொதுத்துறை மற்றும் பிரபல தனியார் துறை வங்கி ஊழியர்களின் சம்பளத்தை 15% வரையிலும் உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, வங்கி ஊழியர்களின் வேலை நேரத்தை குறைக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்தால் வங்கி ஊழியர்களின் வேலை நேரம் நாள் ஒன்றிற்கு 45நிமிடங்கள் கூடுதலாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.