1. Home
  2. தமிழ்நாடு

எல்.முருகனை தொடர்ந்து மத்திய அமைச்சராகிறாரா தமிழக பாஜக தலைவர்.? அண்ணாமலை மறுப்பு..!

1

 நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

இன்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர், பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் சுமார் 8000 விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர்.இதனை முன்னிட்டு தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழக பாஜக தலைவரான அண்ணமலைக்கும் மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் கோவைத் தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இரண்டாவது இடத்தை பிடித்து தோல்வியை சந்தித்தார்.

தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இருப்பினும் தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்த போதும், அந்தக் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாததால் கட்சியில் மோதல் வெடித்துள்ளது.

அண்ணாமலை பாஜக தலைவராக நீடிக்கக்கூடாது என சில மூத்த தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலை பதவி ஏற்பு விழா நடைபெற உள்ள நிலையில் அண்ணாமலைக்கும் பதவி ஏற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.ஆனால் பாஜக தரப்பில் இருந்து இதுவரை இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. 

 இந்தநிலையில், மத்திய அமைச்சராக நியமிக்கப்படுவதாக வெளியான தகவல்களுக்கு அண்ணாமலை மறுப்பு தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like