1. Home
  2. தமிழ்நாடு

இப்போதாவது ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை ஸ்டாலின் உணர்வாரா? இபிஎஸ் கேள்வி..!

1

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: 

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவர் கௌதம், நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

 
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 24-வது மாணவர் நீட் தேர்வால் உயிரிழப்பு!
 
ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது திரு. முக ஸ்டாலின் உணர்வாரா?
 
அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே- 
 
திமுக ஆட்சி வந்தால் நீட் ஒழிந்துவிடும் என இந்த டம்மி அப்பாவும், அவர் மகனும் கூறிய அத்தனையும் பொய்! பொய்! பொய்!
 
ஊழல் செய்யவும், கொள்ளையடித்த பணத்தைக் காப்பாற்றவும், ED ரெய்டுக்கு பயந்து "தம்பி"யை தப்பிக்க வைக்கவுமே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. (#யார்_அந்த_தம்பி?)
 
இவர்களா நீட் ரத்து செய்யப்போகிறார்கள்? அத்தனையும் நாடகம்! திமுகவின் நாடகத்திற்கு நீங்கள் பலியாக வேண்டாம்!
 
ஒரு முறை, ஒரே ஒரு முறை, உங்கள் பெற்றோர்களைப் பற்றி சிந்தித்து பாருங்கள். அவர்களுக்கு நீங்கள் தான் உலகமே. அவர்களை விட்டுச் செல்ல ஒருபோதும் நினைக்காதீர்கள்.
 

தம்பி கௌதமின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
திரு. ஸ்டாலின் அவர்களே- வெட்டியாக எடுக்கும் உங்கள் போட்டோஷூட்டை நீட் மாணவர்களுக்காக ஒருமுறை எடுத்து, அவர்களிடம் நீங்கள் சொன்ன பொய்க்காக பகிரங்க மன்னிப்பு கேளுங்கள்!


 


 

Trending News

Latest News

You May Like