1. Home
  2. தமிழ்நாடு

தமிழக மக்களுக்கும், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் இதற்கு பதில் கூறுவாரா ? அண்ணாமலை

Q

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
சாதிவாரி கணக்கெடுப்புக்காக, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி குலசேகரன் தலைமையில் முந்தைய அரசு ஆணையம் அமைத்தது. அதன்பிறகு ஆட்சி பொறுப்புக்கு வந்த திமுக, ஆணையத்துக்கு 6 மாதம்கூட கால நீட்டிப்பு வழங்கவில்லை. அப்படி வழங்கியிருந்தால் தமிழகத்துக்கு தற்போது சாதிவாரியான புள்ளிவிவரங்கள் இருந்திருக்கும். ஏன் அவ்வாறு கால நீட்டிப்பு வழங்கவில்லை என்பதை தமிழக மக்களுக்கும், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும்.
இதுமட்டுமின்றி, கடந்த 2011-ம் ஆண்டு மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் உதவியுடன் மாநில அரசுகள் மூலமாக சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த பணிகள் 2013-ம் ஆண்டு 99.3 சதவீதம் முடிவடைந்த போதிலும், கணக்கெடுப்பு விவரங்களை மத்திய காங்கிரஸ் அரசு வெளியிடவில்லை என்பதையும் தமிழக முதல்வருக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு விருப்பம் இல்லையா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like