1. Home
  2. தமிழ்நாடு

அல்லு அர்ஜூனுக்கு வில்லனாக நடிக்கிறாரா வில் ஸ்மித்?

Q

இயக்குநர் அட்லீ ’ஜவான்’ படத்திற்கு பிறகு தேசிய அளவில் மிகவும் பிரபலமான இயக்குநராக வலம் வருகிறார். அட்லீ முதலில் இயக்கிய ’ராஜா ராணி’ திரைப்படம் மூலம் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து இரண்டாவது படத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ விஜய்யை வைத்து இயக்கிய ’தெறி’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
பின்னர் விஜய்யை வைத்து ’மெர்சல்’, ’பிகில்’ என வரிசையாக அட்லீ இயக்கிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக சாதனை படைத்தது. கமர்ஷியல் ஹீரோக்களுக்கு மிகவும் பிடித்தமான இயக்குநராக வலம் வந்த அட்லீக்கு திடீரென பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய ’ஜவான்’ திரைப்படம் 1000 கோடி வசூல் செய்து இமாலய சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து அட்லீ, நடிகர் சல்மான் கானை வைத்து இயக்கப் போகிறார் என பல்வேறு செய்திகள் உலா வந்த நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கும் படத்தில் அல்லு அர்ஜூன் கதாநாயகனாக நடிக்க போவதாக அறிவிப்பு வெளியானது. இதுகுறித்து வெளியான அறிவிப்பு வீடியோ ரசிகர்களை மிரள வைத்தது. 600 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் கிராஃபிக்ஸ் கலைஞர் ஜேம்ஸ் மேடிகன், captain america, avengers age of ultron உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர் ஜாஸ் பெர்னாண்டஸ் ஆகியோர் பணிபுரிகின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அது மட்டுமின்றி இப்படம் பேரலல் யுனிவர்ஸ் (parellel universe) போன்ற கதைக்களத்தில் உருவாகி வருவதாக தெரிகிறது. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தில் வில்லனாக நடிக்க ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் உடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அவர் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் உலக அளவில் பெரிய அளவில் பேசப்படும் இந்திய படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

Trending News

Latest News

You May Like