செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா ? இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை..!
ஜாமீன் வழங்க கோரியும், கைது நடவடிக்கைக்கு எதிராகவும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை சார்பில் வழக்கை தள்ளி வைக்க கோரிக்கை வைத்தனர். அதற்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் வழக்கை மே 15-ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள் அடுத்த முறை நிச்சயம் விசாரணை நடைபெறும் என உறுதி அளித்தனர்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கோடை விடுமுறைக்கு பின்னர் வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என்ற அமலக்கத்துறை கோரிக்கை விடுத்தது. ஆனால், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகும், எம்எல்ஏ பொறுப்பில் உள்ளதால் influential person-ஆக உள்ளார்; வழக்கு தொடர்புடைய சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளதால் செந்தில்பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்கூடாது., விசாரணையின்போது செந்தில்பாலாஜி உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை, என்று கூறியது.,இதற்கு செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த பதிலில், 320 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன் ஆனால் வேண்டுமென்றே இந்த வழக்கில் தாமதம் செய்ய வேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில் பதில் மனுவை அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கிறது என்று செந்தில் பாலாஜி இதற்கு பதில் அளித்தார். இதையடுத்து அமலாக்கத்துறை அளித்த பதிலில்.. நாங்கள் இந்த வழக்கில் தாமதமாக பதில் அளித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். வேண்டும் என்றே நாங்கள் தாமதம் செய்யவில்லை, என்று அமலாக்கத்துறை கூறியது குறிப்பிடத்தக்கது.