1. Home
  2. தமிழ்நாடு

வெளியான அறிவிப்பு..! பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாமா ?

1

தமிழகத்தில் 2023-24ம் கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அதன் அடிப்படையில் பள்ளிகள் திறக்கும் தேதி நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்க உள்ளதாக கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு மாணவர்களுக்கு தேவையான உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

பள்ளிகள் சில கிலோமீட்டர் தொலைவில் இருந்தால் பயணம் செய்வதற்கு அஞ்சி கல்வியை விட்டு விடக் கூடாது என்ற நோக்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த திட்டம் தான் இலவச பஸ் பாஸ் திட்டம். 1996-97ஆம் கல்வியாண்டில் இலவச பஸ் பாஸ் திட்டம் முதன்முதலில் அமலுக்கு வந்தது. இது அடுத்தடுத்து மாறிய ஆட்சியிலும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது. 

இந்நிலையில் ஜூன் 6 வியாழன் அன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.  பள்ளிகள் திறக்கும் நாளிலேயே இலவச நோட்டு, பாடப் புத்தகங்களை வழங்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் பேருந்தில் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் இலவச பஸ் பாஸை புதுப்பிக்க வேண்டும். அதற்கு சில வாரங்கள் ஆகும். முதலில் வகுப்பு வாரியாக புகைப்படம் எடுத்துக் கொள்வர். அதன்பிறகு எந்த ஊரில் இருந்து பள்ளிக்கு வருகிறீர்கள்? பேருந்து வசதிகள்? உள்ளிட்ட தகவல்களை பெறப்படும்.

இவற்றின் அடிப்படையில் போக்குவரத்து துறை ஒப்புதலுடன் இலவச பஸ் பாஸ் அச்சிட்டு வழங்கப்படும். அதுவரை பழைய பஸ் பாஸை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நடத்துநர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய பஸ் பாஸ் தரும் வரை, பழைய பஸ் பாஸையே அனுமதிக்க வேண்டும். மேலும் பள்ளி அடையாள அட்டை வைத்திருந்தாலும் அனுமதிக்கலாம் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது 

Trending News

Latest News

You May Like