1. Home
  2. தமிழ்நாடு

தொழில்நுட்ப சிக்கலால் ஆன்லைனில் தேர்வு பாதிப்பா ? - மாணவர்களுக்கு இருக்கு ஒரு வாய்ப்பு !

தொழில்நுட்ப சிக்கலால் ஆன்லைனில் தேர்வு பாதிப்பா ? - மாணவர்களுக்கு இருக்கு ஒரு வாய்ப்பு !


கொரோனா பாதிப்பு காரணமாக இந்தாண்டு கல்லூரி தேர்வுகள் நடைபெறவில்லை. எனினும் இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் மட்டும் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு நடைபெறு வருகிறது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களும் ஆன்லைனில் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தி வருகின்றன.

முதல்முறையாக ஆன்லைனில் நடைபெறும் இறுதி செமஸ்டர் தேர்வை Mobile Hanging, Slow Internet உள்ளிட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக சில மாணவர்களால் எழுத முடியாமல் போனது.

தொழில்நுட்ப சிக்கலால் ஆன்லைனில் தேர்வு பாதிப்பா ? - மாணவர்களுக்கு இருக்கு ஒரு வாய்ப்பு !

தொழில்நுட்ப சிக்கலால் ஆன்லைன் தேர்வை எழுத முடியாமல்போன மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

வரும் 30ஆம் தேதி வரை ஏற்கனவே திட்டமிடப்பட்ட இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெற உள்ளதால், அக்டோபர் முதல் வாரத்தில் மறு தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும், அனைத்து பல்கலைக்கழகமும் இதுகுறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாகவும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை மறு தேர்வையும் ஆன்லைனிலேயே நடத்த முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


newstm.in

Trending News

Latest News

You May Like