அக்டோபர் 31ல் மழை பெய்யுமா? வானிலை அறிக்கை சொல்வதென்ன..!
இந்த வருடம் வருகிற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அதற்காக மக்கள் ஆடைகள், பட்டாசுகள் வாங்க ஆரம்பித்து விட்டனர்.
இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் சில நாட்களுக்கு ஆரம்பித்த வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இப்படி இருக்கையில் 2024 தீபாவளி பண்டிகை வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், அன்று மழை பொழியுமா என்ற கேள்வி தற்போது எழுந்து வருகிறது.
ஏனென்றால் தீபாவளி பண்டிகை வியாபாரத்தை நம்பி இருக்கும் மக்கள் தான் கடும் அவதியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ” தீபாவளி பண்டிகை அன்றும் சரி, அதற்கு முந்தைய நாட்களிலும் சரி மழை பொழிய வாய்ப்பு இல்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனென்றால் காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு அந்தமான் கடல் பகுதியில் அக்டோபர் 21-ம் தேதி உருவாகும். அப்போது காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக அக்டோபர் 23ம் தேதி வலுப்பெறும்.
இதையடுத்து, வடக்கு ஆந்திரா – வங்காளதேசம் இடையே கரையை கடக்க இருக்கிறது. எனவே இப்படி கரையை கடந்தால் அடுத்த நிகழ்வு உருவாக ஒரு வாரம் எடுக்கும்.
இதனால் அக்டோபர் 22 தேதிக்கு பிறகு தமிழ்நாட்டில் கோடை காலம் போல வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு அதிகமாக இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.