1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்திற்கு மழை வருமா ? வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன..?

1

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வட உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு 109 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் கொழுத்த வாய்ப்புள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களில் மே 01- ஆம் தேதி வரை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் உயர வாய்ப்புள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு 3 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் உயர வாய்ப்புள்ளது.

வட தமிழக உள் மாவட்டங்களில் மே 02, 03- ல் வெப்ப அலை வீசக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையில் 37- 38 டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கும். கன்னியாகுமரி, நெல்லையில் மே 01- ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டத்தில் மே 02- ஆம் தேதி லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி, வட தமிழக உள் மாவட்டங்களில் மே 03- ஆம் தேதி முதல் மே 05- ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like