பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொள்கிறேனா? - வம்பு வேண்டாம் என பிரபல நடிகர் ஓட்டம்...

பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொள்கிறேனா? - வம்பு வேண்டாம் என பிரபல நடிகர் ஓட்டம்...

பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொள்கிறேனா? - வம்பு வேண்டாம் என பிரபல நடிகர் ஓட்டம்...
X

தமிழ் மொழியில் பிக்பாஸ் சீசன் 3 வரை ஒளிபரப்பாகி உள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 3 சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த ஆண்டு கொரோனா லாக்டவுனால் தமிழில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி தொடங்கப்படுமா என்பது பற்றிய அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

ஆனால் தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4-க்கான டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதனால், விரைவில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், 2-வது சீசனை நானியும், 3-வது சீசனை நடிகர் நாகர்ஜூனாவும் தொகுத்து வழங்கி இருந்தார்கள்.
 
தற்போது 4-வது சீசனையும் நடிகர் நாகர்ஜூனாவே தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய இந்நிகழ்ச்சி இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சற்று தாமதமாக ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த சீசனில் கலந்து கொள்ளப்போவதாக சில திரைபிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. அதில், ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தில் நடித்த நடிகர் தருண் பெயரும் இடம்பெற்றிருந்தது.

ஏற்கனவே பிக்பாஸ் என்றால் சர்ச்சைகள் நிறைந்தது என பரவி வருகிறது. இதனால் பதறிபோன நடிகர் தருன் நான் அவன் இல்லை என விளக்கம் அளித்துள்ளார். 

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்திருக்கும் நடிகர் தருண், “நான் பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொள்ளப்போவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை. அனைத்தும் வதந்திகள். போலியான செய்திகளை நம்ப வேண்டாம். வதந்திகளை பரப்பாதீர்கள்” என்று கூறியுள்ளார்.

newstm.in 

Next Story
Share it