அடுத்த முதல்வர் இவரா? ஷாக் கொடுத்த கருத்து கணிப்பு!

சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் என்கிற அமைப்பு 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்புகளை நடத்தியது. கடந்த பிப்ரவரி 5ம் தேதி முதல் ஜூன் 17ம் தேதி வரை 234 சட்டமன்றத் தொகுதியில் அரசியல் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் ஆய்வாளர்கள், உதவியாளர்கள், 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், பயிற்சி பெற்ற பெண்கள், இளைஞர்கள் கலந்துகொண்டு அனைத்து பகுதிகளிலும் 70,922 பேர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்து கணிப்பு முடிவுகளை இந்திய அரசியல் ஜனநாயக யுத்திகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு மற்றும் அவரது குழுவினர் சென்னை பத்திரிகையாளர் வைத்து வெளியிட்டனர். அதில், 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக 77.83 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி 73.30 சதவீததுடன் 2வது இடத்திலும், உதயநிதி ஸ்டாலின் முதல்வராக 67.99 சதவீதம் பேரும், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை முதல்வராக 64.58 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழக அரசியல் பெரும் தாக்கத்தை எற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படும் விஜய் முதல்வராக 60.58 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள அரசியல் கட்சி எது என்கிற கேள்விக்கு திமுக அல்லது அதிமுக ஆட்சி அமையும் என்று 80.74 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். வரும் காலத்தில் இவரால் தான் தமிழகம் தலை சிறக்கும் என நீங்கள் நம்புகிற இளம் தலைவர் யார்? என்கிற கேள்விக்கு அண்ணாமலை முதலிடத்திலும், 2-வது இடத்தில் விஜய், 3-வது இடத்தில் உதயநிதி உள்ளார்.
தற்போதைய அரசியல் சூழலில் யாருக்கு உங்கள் வாக்களிப்பர் என்ற கேள்விக்கு திமுகவுக்கு ஓட்டு போடுவோம் என்று 17.7 சதவீத பேரும், அதிமுகவுக்கு வாக்களிப்போம் என்று 17.3 சதவீதம் பேரும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிப்போம் என்று 12.20 சதவீதம் பேரும், பாஜகவுக்கு 5 சதவீதம் பேரும், பாமகவுக்கு 4.9 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மேலம் யாருக்கும் ஓட்டு போடப்போவது இல்லை என 6 சதவீதம் பேரும், நோட்டாவுக்கு வாக்களிக்கப் போவதாக 3.3 சதவீதம் பேரும், யாருக்கு ஓட்டு போடுவது என்று இன்னும் தீர்மானிக்கவில்லை என 8.3 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தொடர்பாக நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் அதிமுக-பாஜக கூட்டணி வலுவான கூட்டணியாக அமைந்தால் திமுக அணியை விட அணியை விட வித்தியாசத்தில் முன்னிலை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.