1. Home
  2. தமிழ்நாடு

தங்க நாணயம் வெல்லணுமா ? ரீல்ஸ் போடுங்க போதும்..!

1

‘தங்கலான்’படத்தை புரமோஷன் செய்யும் விதமாக, ‘மினிக்கி மினிக்கி...’பாடலுக்கு  ரீல்ஸ் செய்து வெளியிடுவோர்க்கு தங்க நாணயம் தருவதாக ஸ்பெஷல் ஆஃபரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

இப்படத்தின் கதை கர்நாடகாவின் கே.ஜி.எஃப். பகுதியில் வாழ்ந்த மக்களைப் பற்றி உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில்  விக்ரம், பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் ‘மினிக்கி மினிக்கி...’பாடலுக்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து வெளியிடுவோர்க்கு தங்க நாணயம் தருவதாக ஸ்பெஷல் ஆஃபரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சிறந்த  ரீல்ஸாக 20 ரீல்ஸை தேர்வு செய்து 20 தங்க நாணயம் வழங்குவதாக தெரிவித்துள்ளது. வெற்றிபெறுபவர்கள் படக்குழுவினருடன் இணைந்து உணவு அருந்தும் வாய்ப்பையும் படக்குழு ஏற்படுத்தியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


 

Trending News

Latest News

You May Like