1. Home
  2. தமிழ்நாடு

நாளை நியாயவிலைக் கடைகள் செயல்படாதா? - அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு !!

நாளை நியாயவிலைக் கடைகள் செயல்படாதா? - அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு !!


தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், அரசு சார்பில் பொங்கல் பரிசு பொருட்கள், ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பொருட்கள் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) ரேசன் கடைகள் செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பொருட்கள் வழங்கப்படுமா என கேள்வி எழுந்தது.

அதாவது, கொரோனாவை கட்டுப்படுத்தும் விதாக இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகள் முழு ஊரடங்கு விதிக்ககப்பட்டுள்ளது. இதனால் தான் மக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்த நிலையில், ஞாயிறன்று முழு ஊரடங்கு என்பதால் நியாயவிலைக் கடைகள் செயல்படாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாளை நியாயவிலைக் கடைகள் செயல்படாதா? - அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு !!

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிவிப்பில், வரும் ஞாயிறு (09.01.2022) அன்று கொரோனா மற்றும் ஒமைக்ரான் திரிபு பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு நடைமுறை அமல் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் முழு ஊரடங்கு காரணமாக நியாயவிலைக் கடைகள் செயல்படாது என கூறப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு காரணமாக பொது விநியோகத் திட்ட நியாயவிலைக் கடைகள் 09.01.2022 அன்று செயல்படாது. அன்றைய தினம் பொங்கல் பரிசு பெற டோக்கன்கள் பெற்ற அட்டைதாரர்களுக்கு 13.01.2022-க்கு முன்பாக பரிசு பொருட்கள் விநியோகம் நடைபெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனை ஆணையாளர் ராஜாராமன் தெரிவித்துள்ளார்.


newstm.in

Trending News

Latest News

You May Like